ஹீரோயின்கள் போட்டி சமாளிக்க செல்ஃபி சலுகை அறிவித்த டாப்ஸி
தென்னிந்திய படங்களில் ஒன்றிரண்டு படங்களை தவிர தனக்கு நல்ல வேடங்கள் தரப்படவில்லை என்ற கோபத்தில் இந்தி படங்களில் நடிக்கச் சென்றார் டாப்ஸி. அது ஒர்க் அவுட் ஆனது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஒதுக்கி வந்தார். தற்போது கோபம் தணிந்து தென்னிந்திய படங்களுக்கு ஓ.கே. சொல்லி இருக்கிறார்.
புதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் டாப்ஸி புதிய திட்டத்துடன் ரீஎன்ட்ரி ஆகிறார். ஏற்கனவே ஹீரோயின்கள் போட்டி கடுமையாக இருப்பதால் அதை சமாளிக்க இந்த திட்டம் கைகொடுக்கும் என்று நம்புகிறார். தான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலை இணைய தள டுவிட்டர் பக்கத்தில் சஸ்பென்ஸாக வெளியிட்டுள்ளார்.
நிஜ டைட்டிலை கணித்து சொல்லும் ரசிகர் தன் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ள லாம் என்று சலுகை வழங்கி உள்ளார். டாப்ஸியின் புதிய யுக்தி அவரை தென்னிந்திய படங்களில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க உதவுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.
Comments
Post a Comment