விவேகம் படம் பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட காஜல் அகர்வால

விவேகம் படம் பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட காஜல் அகர்வால்!

சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடித்துவரும் படம் ‘விவேகம்’. விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘விவேகம்’ டீஸரில் இடம்பெற்றிருந்த ‘நெவர் எவர் கிவ் அப்’ என்ற வாசகம், அஜித் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்ததால் பாடலாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
அஜித்தின் விவேகம் பட டீஸர் யூடியூபையே திணறடித்து, அதிக பார்வையாளர்களை கொண்ட டீஸர் என்ற பெருமையையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் காஜல் அகர்வால் அஜித்தின் விவேகம் படம் பற்றி இப்போதைக்கு எதுவும் பேசக் கூடாது. ஆனால் படத்தில் ராம்போ ஸ்டைல்ல ஒரு எஸ்கேப் அண்ட் கவுண்டர் அட்டாக் சீன் இருக்கு பாருங்க, செம மாஸ். அவருடைய ரசிகர்களுக்கு நல்ல தீனி. நாட்டு மக்களுக்கும் ஒரு நல்ல மெசேஜ் சொல்ற படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Comments