விஜய் இதுவரை எத்தனை நடிகருடன் இணைந்து நடித்துள்ளார் தெரியுமா?
இளைய தளபதி விஜய் பெரும்பாலும் சோலோ ஹீரோவாக தான் நடிப்பார். ஆனால், இவர் ஆரம்பக்காலத்தில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார், சமீபத்தில் கூட டபூள் ஹீரோ கதை என்றால் ஓகே என்ற மனநிலைக்கு வந்துவிட்டார், இந்நிலையில் விஜய் இதுவரை எத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதை பார்ப்போம்.
விஜய்-விஜயகாந்த்
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இளைய தளபதி விஜய் பலருக்கும் தெரிய முக்கிய காரணம் செந்தூரபாண்டி படம் தான், இப்படத்தில் கேப்டன் விஜயகாந்துடன் இவர் இணைந்து நடித்தது, பட்டித்தொட்டியெல்லாம் விஜய் முகம் தெரியவந்தது.
விஜய்-அஜித்
இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர்கள் விஜய்-அஜித், இவர்கள் இணைந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே தான்.
விஜய்-சூர்யா
இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா அறிமுகமானதே விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில் தான், இதை தொடர்ந்து இவர் ப்ரண்ட்ஸ் படத்திலும் விஜய்யுடன் நடித்தார்.
விஜய்-ஜெய்
வளர்ந்து வரும் நடிகர் ஜெய் நடித்த முதல் படம் பகவதி, இவர் விஜய் மாதிரியே இருப்பதால் அவருக்கு தம்பியாக இந்த படத்தில் ஜெய் நடித்திருந்தார்.
விஜய்-ரவிகிருஷ்ணா
நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தன் தந்தை இயக்கத்தில் நடித்த படம் சுக்ரன், இப்படத்தில் விஜய் இரண்டாம் பாதியில் தான் வருவார், இருந்தாலும் விஜய்யின் மார்க்கெட் அறிந்து அவர் பெயரையே படத்தில் டைட்டிலாக வைத்தனர், இதில் ரவிகிருஷ்ணாவிற்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார்.
விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்த்
விஜய் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார், அந்த நேரத்தில் தன் மாஸ் இமேஜ் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு வளர்ந்து வரும் நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்துடன் விஜய் நடித்த படம் தான் நண்பன்.
விஜய்-அக்ஷய்குமார்
விஜய்க்கும் பிரபுதேவாவிற்கும் ஒரு நல்ல நட்பு உள்ளது, அவர் கேட்டதற்காக பாலிவுட் படமான ரவுடி ரத்தோர் படத்தில் ஒரு பாடலுக்கு அக்ஷய் குமாருடன் இணைந்து நடனமாடி கொடுத்தார்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
விஜய்-சத்யராஜ்
சத்யராஜின் பேவரட் நடிகர் விஜய் தான், இதை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார், சத்யராஜ் விஜய்யுடன் இணைந்து நண்பன், தலைவா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
விஜய்-மோகன்லால்
விஜய்க்கு மலையாள சினிமாவில் பெரிய மார்க்கெட் இருப்பது அனைவரும் அறிந்ததே, அதை டார்கெட் செய்யும் நோக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் விஜய் கூட்டணி அமைத்த படம் தான் ஜில்லா,
விஜய்-நீல்நிதின் முகேஷ்
நீல்நிதின் தமிழில் வேண்டுமானால் கத்தி முதல் படமாக இருக்கலாம், ஆனால், பாலிவுட் திரையுலகில் இவர் முன்னணி நடிகராக வலம் வந்தவர், இவர்கள் கூட்டணி கத்தியில் மிரட்டியது.
விஜய்-பிரபு
பிரபுவிற்கு விஜய்யை மிகவும் பிடிக்கும், அதன் காரணமாகவே எப்படியாவது விஜய்யை தங்கள் தயாரிப்பில் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி வருகின்றார், இவர்கள் கூட்டணியில் தெறி, புலி என இரண்டு படங்கள் வந்துள்ளது.
விஜய்-சுதீப்
கன்னட சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர் சுதீப், இவர் விஜய் கேட்டதற்காக புலி படத்தில் வில்லனாக நடித்தார், ஆனால், தன் நடிப்பை பெரிதும் பயன்படுத்தவில்லை என சுதீப் பல பேட்டிகளில் வருத்தம் தெரிவித்தார்.
விஜய்-61
இளைய தளபதி விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்து வருகின்றார், இப்படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் மட்டுமின்றி பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்
Comments
Post a Comment