ஹிந்தி பேச பயிற்சி எடுக்கிறார் பிரபாஸ்!
பாகுபலிக்குப் பிறகு இந்திய அளவில் பிரபல நடிகராகி விட்டார் பிரபாஸ். அதனால் அடுத்து சுஜித் இயக்கத்தில் அவர் நடிக்கும் சாஹோ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ஹாலிவுட் தொழில் நுட்பத்தில் தயாராகிறது. அதேபோல் அடுத்தடுத்து பிரபாஸ் நடிக்கயிருக்கும் எல்லா படங்களும் இந்திய அளவில் தயாராக உள்ளதாக கூறப்படுகின்றன.
மேலும், இப்படி தான் நடிக்கும் படங்கள் பல மொழிகளிலும் வெளியாகயிருப்பதால் அந்த படங்களின் புரமோஷனுக்கு செல்லும்போது அந்தந்த மொழிகளில் ரசிகர்களிடம் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார் பிரபாஸ். முக்கியமாக, சாஹோ படம் வெளியாகும்போது மும்பை சென்று இந்தியில் அங்குள்ள ரசிகர்கள் முன்பு வேண்டும் என்பது பிரபாஸின் எண்ணமாக உள்ளதாம். அதனால், தற்போது அமெரிக்கா சென்று ஓய்வெடுத்து வரும் பிரபாஸ், சாஹோ படத்தில் நடிக்கத் தொடங்கியதும் ஹிந்தி பேசவும் தீவிர பயிற்சியில் ஈடுபடப்போகிறாராம்.
Comments
Post a Comment