நாட்டின் நீளமான பாலம் இன்று திறப்பு
நாட்டின் மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி, அசாமில் இன்று திறந்து வைக்கிறார். தின்சுகியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தோலா - சதியா பாலம், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 9.15 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. காலை 10.45 மணிக்கு இந்த பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த பாலம் திறக்கப்படுவதன் மூலம் அசாம், அருணாச்சல பிரதேசம் இடையேயான பயணம் நேரம் 4 மணிநேரம் வரை குறையும்.
Comments
Post a Comment