மூன்று மாதங்களுக்கு நடிப்புக்கு ஓய்வு கொடுக்க சமந்தா முடிவு !

மூன்று மாதங்களுக்கு நடிப்புக்கு ஓய்வு கொடுக்க சமந்தா முடிவு !

3 மாதங்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுக்க சமந்தா முடிவு செய்துள்ளார். நாக சைதன்யா - சமந்தா திருமணம் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது விஜய்யுடன் நடித்து வரும் சமந்தா, விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் சேதுபதியுடன் அநீதி கதைகள், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், தெலுங்கில் 2 படங்கள் என பிசியாக நடித்து வருகிறார். திருமணத்தையொட்டி அக்டோபர் முதல் டிசம்பர் வரை அவர் நடிப்புக்கு ஓய்வளிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த மூன்று மாதமும் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாது என நடித்து வரும் படங்களின் டைரக்டர்களுக்கு தெரிவித்துள்ளாராம். திருமணம் முடிந்ததும் வெளிநாடுகளுக்கு தேனிலவு செல்ல நாகசைதன்யா, சமந்தா முடிவு செய்துள்ளனர். இதனாலேயே அவர் 3 மாதம் கழித்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவாராம்.

Comments