ஆவணம் இல்லாத வாகனம்- போலீசிடம் சிக்கிய அனுஷ்கா

ஆவணம் இல்லாத வாகனம்- போலீசிடம் சிக்கிய அனுஷ்கா

பாகுபலி படத்தை தொடர்ந்து அனுஷ்கா தெலுங்கில் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பொள்ளாச்சியில் நடைபெற்றிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அனுஷ்கா பயன்படுத்தி வந்த கேரவனை போலீசார் சோதனை செய்தபோது, முறையான ஆவணங்கள் அந்த கேரவனுக்கு இல்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அனுஷ்கா பயன்படுத்திய கேரவனை போலீசார் பறிமுதல் செய்தனர். பாக்மதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜி.அசோக் இயக்க, எஸ். தமன் இசையமைத்து வருகிறார்.
படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Comments