தென்னிந்தியாவுக்கே சூப்பர் ஸ்டாரான அஜித்
அஜித்தை, ‘தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ எனப் புகழ்ந்துள்ளார் பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய்.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள விவேக் ஓபராய், “நான், என்னுடைய முதல் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளேன். அந்தப் படத்தின் பெயர் ‘விவேகம்’. ‘தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ அஜித்துடன் நடித்துள்ளேன். முழு படப்பிடிப்பும் ஐரோப்பாவில் நடைபெற்றுள்ளது. 120 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment