சமந்தாவுக்கு குவியும் கண்டனம்
சமூக வலைதளங்களில், தன் உள்ளாடைகளின் படத்தை வெளியிட்ட, நடிகை சமந்தாவுக்கு கண்டனங்கள் குவிகின்றன. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்த நடிகை சமந்தா, அவரை திருமணம் செய்ய உள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில், தன் படங்களை பதிவிடுவதில் ஆர்வம் உடைய, சமந்தா, அவ்வப்போது அரைகுறை படங்களையும், நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்லும் படங்களையும் பதிவிட்டு உள்ளார். இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னர் தன் உள்ளாடைகளின் படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அவருக்கு கடும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.
நாகார்ஜுனா குடும்ப ரசிகர் ஒருவர் கூறுகையில், நீங்கள் இப்போது ஒரு நடிகை என்பதை விட, நாகார்ஜுனா குடும்ப பெண்மணியாக உள்ளீர்கள். தயவு செய்து, இது போன்ற படங்களை சமூக வலைதளங்களில் இனி பதிவிடாதீர்கள் என, கூறியுள்ளார்.
இன்னொரு ரசிகர் ஒருவர், "ஏம்மா. ஒரு நல்ல குடும்பத்தில் வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதை விட்டுடாதே. உன் உள்ளாடையை எவனாவது பார்க்கனும்னு கேட்டானா. உன்னை நீயே அசிங்கப்படுத்திக்கிற... என்று கூறியுள்ளார்.
மூலக்கதை
Comments
Post a Comment