சாவித்திரி கெட்டப்பில் கீர்த்தி..!

சாவித்திரி கெட்டப்பில் கீர்த்தி..!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சமந்தா, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம்.
தற்போது, கீர்த்தி சுரேஷ் பழைய கால ஆடைகள் அணிந்திருப்பது போல் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம் 'நடிகையர் திலகம்' படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், படக்குழுவினரிடமிருந்து அதிகாரபூர்வமான புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை

Comments