பிரதமரை சந்தித்து கண்டனத்திற்கு ஆளான பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சென்றுவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, தனது ஹாலிவுட் படமான பேவாட்ச் பட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். இதற்காக ஜெர்மனி சென்றிருக்கிறார் பிரியங்கா.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடியை, நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்தார். இந்த புகைப்படத்தை பிரியங்கா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், குட்டை பாவடை அணிந்து பிரதமர் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார் பிரியங்கா. இது சமூக வலைதளங்களில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நாட்டின் பிரதமர் முன் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தது மட்டுமல்லாமல் அவரை சந்திக்க இப்படியா குட்டை பாவடை அணிந்து செல்வது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்கிற ரீதியில் வலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் தனக்கு எதிராக எழுந்த கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களை எல்லாம் கண்டு கொள்ளாத பிரியங்கா, மற்றொரு உடையில் குட்டைப்பாவடை அணிந்த போட்டோவை வெளியிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment