சங்கராந்திக்கு வெளியாகும் மகேஷ்பாபுவின் பாரத் அனி நேனு

சங்கராந்திக்கு வெளியாகும் மகேஷ்பாபுவின் பாரத் அனி நேனு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ஸ்பைடர். தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்து கோரட்டாலா சிவா இயக்கும் பாரத் அனி நேனு என்ற படத்தில் நடிக்கிறார் மகேஷ்பாபு. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. என்றாலும், ஸ்பைடர் இறுதிகட்டத்தில் இருப்பதால் ஜூன் மாதம் மூன்றாவது வாரம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் மகேஷ்பாபு.
மேலும், ஸ்பைடர் படம் சில மாதங்களில் வெளியாகும் நிலையில், 2018-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி சங்கராந்திக்கு பாரத் அனி நேனு படத்தை வெளியிடுகிறார்களாம். அதனால் சங்கராந்திக்கு வெளியாகும் மற்ற படங்களுக்கு மகேஷ்பாபுவின் இந்த படம் பெரிய போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். மேலும், இந்த ஜூன் மாதம் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு மகேஷ்பாபு கலந்து கொள்ளும் நிலையில், ஜூலை மாதம் யூனிட் லண்டனில் முகாமிடுகிறது. அந்த வகையில், லண்டனில் 30 நாட்கள் தொடர்ச்சியாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.

Comments