கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை

பவானி: பவானி, சித்தோடு அம்மன் கல்லூரி வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பவானி, சித்தோட்டில், ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 17 இளங்கலை பாடப் பிரிவுகள், எட்டு முதுகலை பாடப் பிரிவுகள் மற்றும் எம்.பில்., பாடப் பிரிவுகளில், சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. தமிழகம் மற்றும் சிக்கிம், பூடான், கேரளா, கர்நாடகா, ஆந்திரா முதலான மாநிலங்கள் மற்றும் நைஜீரியா, சூடான், கென்யா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து, 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி பயில வருகின்றனர். வெள்ளி விழா ஆண்டில் மாணவர்களுக்கு கட்டணச்சலுகை, இலவசக் கல்வி மற்றும் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 2016 - 17 வெள்ளிவிழா ஆண்டில், கல்லூரியில் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி தாளாளர் ஜெயலட்சுமி, உதவித்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.

Comments